Last Updated : 02 Aug, 2022 10:30 AM

 

Published : 02 Aug 2022 10:30 AM
Last Updated : 02 Aug 2022 10:30 AM

சேதி தெரியுமா?

ஜூலை 23: குரங்கு அம்மை 70 நாடுகளில் பரவியுள்ள நிலையில் அதைச் சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.

ஜூலை 24: தேசியக் கொடியை இரவிலும் பறக்கவிட அனுமதிக்கும் வகையில் தேசியக் கொடி தொடர்பான விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்தது.

ஜூலை 25: நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜூலை 26: தமிழகத்தில் கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக்காடு உள்பட இந்தியாவில் ஐந்து இடங்கள் ‘ராம்சர்’ எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

ஜூலை 27: தமிழகத்தில் 1 - 5ஆம் வகுப்பு வரையிலான அரசுத் தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஜூலை 27: மத்தியப் பிரதேசத்தில் 27 புலிகள் உள்பட இந்தியாவில் 74 புலிகள் நடப்பாண்டியில் உயிரிழந்துள்ளதாகத் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 28: 44ஆவது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். மாமல்லபுரத்தில் நடக்கும் போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 1,736 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஜூலை 28: 22 ஆவது காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பிரிட்டனின் பர்மிங்ஹாமில் தொடங்கின. இப்போட்டியில் இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x