Published : 18 Jan 2022 11:55 AM
Last Updated : 18 Jan 2022 11:55 AM

‘‘அனைத்து துறைகள் சார்ந்த முழுமையான தகவல் தொகுப்பு’’

‘இந்து தமிழ் இயர்புக் 2022’ சிறப்பான தொகுப்பாக வெளிவந்துள்ளது. ஐ.ஏ.எஸ்.தேர்வுக்குப் படிக்கும் காலத்திலிருந்து இயர்புக்குகளைப் பார்த்துவருகிறேன். ‘இந்து தமிழ் இயர்புக்’கில் தேவையான அனைத்தும் முழுமையாக இருப்பதை உள்ளடக்கப் பக்கங்களைப் பார்த்தாலே தெரிந்துகொள்ள முடிகிறது.

போட்டித் தேர்வு பகுதி புதிய தகவல்கள், லேட்டஸ்ட் அப்டேட் போன்றவற்றுடன் சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் ஐவர் தேர்வுக்குத் தயாராவது குறித்து வழிகாட்டும் கட்டுரைகள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கக்கூடியவை.

அறிவியல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள், அண்மைக் கால முன்னேற்றங்கள் உட்பட அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பகுதி எனக்குப் பெரிதும் பிடித்திருந்தது. சர்வதேச ஒப்பந்தங்கள், மாநாடுகள் குறித்த தகவல்கள் அதில் அளிக்கப்பட்டுள்ளன. வரலாறு பகுதியில் ‘இந்தியாவின் 75 சிறப்புகள்’ கட்டுரை கவனத்துக்குரியது. பத்ம விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாள் உள்பட பத்ம விருதுகளை வென்றவர்களின் ஒளிப்படங்களைக் கொடுத்திருந்தது கூடுதல் சிறப்பு. அதன் மூலம் இணையத்தில் தேடி கூடுதல் தகவல்களைப் பெற முடிந்தது.

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்கள் குறித்தும் தமிழ்நாடு பகுதியில் விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டிருப்பதும் கவனத்தை ஈர்த்தது.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த இயர்புக் மிகவும் பயனுள்ளது. அதேபோல், பள்ளி மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கும் இந்த இயர்புக்கைப் பரிந்துரைக்கிறேன். அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் மிக்க மாணவர்கள் அந்தந்தத் துறைகள் குறித்து அறிவைச் செழுமைப்படுத்திக் கொள்வதற்கான தொடக்கமாக இந்தப் புத்தகம் அமையும்.

- சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., வட்டாரத் துணை ஆணையர் (வடக்கு)பெருநகர சென்னை மாநகராட்சி

‘இந்து தமிழ் இயர்புக் 2022’ இல் பல பயனுள்ள கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 800 பக்கங்கள், விலை ரூ. 275. ஆன்லைனில் பதிவு செய்ய: store.hindutamil.in/publications

புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற:

‘KSL MEDIA LIMITED’ என்கிற பெயரில் DD, Money Order, Cheque

அனுப்ப வேண்டிய முகவரி: இந்து தமிழ் இயர் புக் 2022, இந்து தமிழ் திசை,

124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x