வழிகாட்டி: தேர்வை ரத்து செய்ய கோரிக்கை

வழிகாட்டி: தேர்வை ரத்து செய்ய கோரிக்கை
Updated on
1 min read

சி.பி.எஸ்.இ. நடப்பு ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்யக் கோரிக்கைவிடுத்து இணையவழி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தக் கோரிக்கை மத்திய அரசுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள தேர்வை ரத்துசெய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் அல்லது இணையம்வழி நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் cancelboardexams2021 என்னும் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்துவருகிறது. ஆனால், சி.பி.எஸ்.இ. தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

கேந்திரிய வித்யாலயங்களில் மாணவர் சேர்க்கை

கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. மத்திய மனிதவளத் துறையால் நடத்தப்பட்டுவரும் இந்தப் பள்ளிகள், தமிழ்நாட்டில் 51 உள்ளன. ஒன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 7 மணி வரை
https://bit.ly/3d5Lp2X என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்டு செயலி வாயிலாகவும் பதிவுசெய்யலாம். இரண்டு - அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை காலியிடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in