ஆதாரபூர்வத் தகவல்களின் சிறந்த தொகுப்பு - ‘இந்து தமிழ்’ இயர்புக் 2021

க.இளம்பவத்
க.இளம்பவத்
Updated on
1 min read

‘இந்து தமிழ்’ நிறுவனத்தின் இயர்புக் 2021 இந்த முறை முன்கூட்டியே வெளிவந்துள்ளது. கரோனா வைரஸ் தாக்கமும் அதன் தொடர்ச்சியும், கரோனாவுக்குப் பிந்தைய உலகில் கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆழமான கட்டுரைகள், முக்கிய ஆளுமைகள் குறித்த அரிதான தகவல்கள், கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், தமிழக அரசு, தமிழக மாவட்டங்கள் குறித்த ஆதாரபூர்வ தகவல்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

கட்டுரைகளிடையே ஆங்காங்கே கலைச்சொற்களை தமிழில் சிறப்புற மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர். போட்டித் தேர்வுகளுக்குத் தமிழில் தயார்படுத்திக்கொள்ளும் மாணவர்களுக்கு இது உதவும். அடுத்தடுத்த வெளியீடுகளில் அந்தந்த ஆண்டில் அறிமுகமாகும் கலைச்சொற்களை தனியாகத் தொகுத்து வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. தரமான செய்திக்கட்டுரைகளை வெளியிடும் ‘இந்து தமிழ்’ செய்தித்தாளின் மற்றுமொரு சிறந்த வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

‘இந்து தமிழ் இயர்புக் 2021’ போட்டித் தேர்வு மாணவர்கள், வாசகர்கள் வாங்கிப் படித்துப் பாதுகாக்கவேண்டிய சிறந்த தகவல் கருவூலம்.

- க.இளம்பவத், சார் ஆட்சியர், ராணிப்பேட்டை

‘இந்து தமிழ் இயர்புக் 2021’ இல் பல பயனுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 800 பக்கங்கள், விலை ரூ. 250. ஆன்லைனில் பதிவு செய்ய: store.hindutamil.in/publications

புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற:

‘KSL MEDIA LIMITED’ என்கிற பெயரில் DD, Money Order, Cheque

அனுப்ப வேண்டிய முகவரி: இந்து தமிழ் இயர் புக் 2021, இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. தொடர்புக்கு: 7401296562 / 7401329402

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in