சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் முதல் தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு வரை: சேதி தெரியுமா? @ பிப்.18-24

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் முதல் தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு வரை: சேதி தெரியுமா? @ பிப்.18-24
Updated on
1 min read

பிப். 18: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையாராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.

பிப்.19: எட்டு அணிகள் பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், துபாயில் தொடங்கியது.

பிப்.20: டெல்லி முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் டெல்லியின் 9ஆவது முதல்வர், 4ஆவது பெண் முதல்வர்.

பிப்.20: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இமையம் நியமிக்கப்பட்டார்.

பிப்.20: பொது இடங்களில் சிலை, கொடிகளை வைக்காமல் சொந்த அலுவலகங்களில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்.21: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

பிப்.22: பிரதமரின் இரண்டாவது முதன்மை செயலராக சக்திகாந்த தாஸை நியமித்து மத்திய அமைச்சரவை நியமனக் குழு உத்தரவிட்டது.

பிப்.22: அரசின் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு சட்ட ரீதியாக முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிப்.22: ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தடையாக இருக்கும் விதிகளை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பிப்.23: துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 14,000 ரன்களை இந்திய வீரர் விராட் கோலி கடந்தார். இந்த மைல்கல்லை குறைந்த போட்டிகளில் (287 இன்னிங்ஸ்) அவர் எட்டினார். இதே மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களில் எட்டியிருந்தார்.

பிப்.24: குறைந்த விலையில் மருந்துகளை வழங்க தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.

தொகுப்பு: மிது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in