

வீடு கட்ட அதற்கான வரைபட அனுமதியை அரசிடம் பெறுவது அவசியம். அதற்கு சாலையின் அகலம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சாலையின் அகலம் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சாதாரண குடியிருப்பு கட்டிடங்கள் என்றால், தரைதளம் மற்றும் முதல் தளம், ஸ்டில்ட் மற்றும் 2 தளம் என்றால், சிஎம்டிஏவுக்கு உட்பட்ட சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் குறைந்த பட்சம் சாலை அகலம் 3.6 மீ ( 12 அடி) இருக்க வேண்டும்.
சென்னை போன்ற நகரங்களின் பழைய வரலாற்றுப் பகுதிகளில், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கட்டப்படும் கட்டிடங்களுக்கு குறைந்தபட்சம் 1.5 மீ முதல் 3.6 மீ வரை சாலை இருக்க வேண்டும்.