

தமிழகத்தில் சொத்து பரிமாற்றத்தின் போதே இணைய வழியில் பட்டா மாறுதல் செய்து தரப்படுகிறது. தற்போது அதிலுள்ள சில குறைபாடுகளைக் களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவையை எளிமைப்படுத்தும் விதமாக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி இதற்குமுன்னர் நில விற்பனையின் போது, விற்பனையாளரின் மனைவி, பிள்ளைகள் போன்ற குடும்ப உறுப்பினர்களும் கையொப்பமிடும்போதும், பொது அதிகார முகவர் (Power of Attorney) மூலம் பதிவுசெய்யும் போது விற்பனை செய்பவரின் பெயர் பட்டாதாரரின் பெயருடன் பொருந்தாத போதும், இந்த சேவையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.