

நிலத்தை வாங்குவதில் கவனம் செலுத்தும் பொதுமக்கள், தற்போது பட்டா மாற்றத்திலும் முனைப்புடன் உள்ளனர். அரசே இதை உணர்ந்து தான், விற்பனைப்பத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவானதும், வருவாய்த்துறைக்கு ஆவணத்தை அனுப்பி, பட்டா மாற்றத்துக்கு எளிய வழியை உருவாக்கியுள்ளது.
தற்போது வழங்கப்படும் பட்டாவில், நிலம் அமைந்துள்ள மாவட்டம், தாலுகா, கிராமம், நில உரிமையாளர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், நிலத்தின் புல (சர்வே) எண், உட்பிரிவு எண், பரப்பு, அந்த நிலத்தின் வகைப்பாடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்து முறையில் வழங்கப்படும் இந்த பட்டாவில் மாற்றத்தை செய்யவேண்டிய அவசியம் எழுந்துள்ளதால் தற்போது நில நிர்வாக ஆணையருக்கு தமிழக அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் மூலம், பட்டாவில், சொத்து பத்திரத்தின் எண், நான்கு எல்லைகள் விவரம், ஆதார் எண்போன்ற விவரங்களும் இடம் பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.