

நாம் எந்த ஒரு சொத்தை வாங்கினாலும், அதன் மீதான வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை பார்ப்பது அவசியம். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட சொத்து (நிலம் அல்லது வீடு) மீது உள்ள சட்டப்பூர்வமான கடன்கள், அடமானங்கள், வழக்குகள், ஈடு வைப்புகள் (liens) அல்லது உரிமை கோரல்கள் (claims) போன்ற "வில்லங்கங்கள்" எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வில்லங்க சான்றிதழை தமிழக அரசின் பதிவுத்துறை வழங்குகிறது.
சொத்து வாங்குவோர், விற்பனையாளரின் உண்மையான உரிமையையும், சொத்தின் மீதான சட்டப் பிணைப்புகளையும் சரிபார்க்க இது உதவுகிறது. முன்பெல்லாம், வில்லங்க சான்றிதழ் பெற சார் பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து காத்திருக்க வேண்டியிருந்தது.