

“வீட்டில் குடியேறிய பிறகு தண்ணீரைச் சேமிக்கச் சொல்கிறோம்; அந்த வீட்டைக் கட்டும்போதே தண்ணீரை சேமிக்க முடியாதா?” ஒரு வீடு கட்டப்படும்போது செங்கல், மணல், சிமென்ட், கம்பி எவ்வளவு தேவை என்று கணக்கிடுகிறோம்.
ஆனால் கட்டுமானம் முடிவதற்குள் அந்த வீடு எவ்வளவு தண்ணீரைக் ‘குடிக்கிறது’ என்று பெரும்பாலும் கணக்கிடுவதில்லை. குறிப்பாக கான்கிரீட் போட்ட பிறகு நடைபெறும் ‘கியூரிங்’ (curing) பணிக்கு தண்ணீர் முக்கியம்.
சிமென்ட்டின் வேதிவினை தொடர்ந்து நடைபெற்று கான்கிரீட் தேவையான வலிமையை அடைய ஈரப்பதம் பாதுகாக்கப்பட வேண்டும். முறையான curing இல்லாவிட்டால் வலிமையும் நீடித்த தன்மையும் பாதிக்கப்படலாம்.