சொந்த வீட்டுக்கு ‘கவசமாகும்’ காப்பீடு

சொந்த வீட்டுக்கு ‘கவசமாகும்’ காப்பீடு
Updated on
3 min read

வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனங்களில் கடன் வாங்கித் தான் நம்மில் பெரும்பாலானோர் தங்களின் வாழ்நாள் கனவான சொந்த வீட்டை நனவாக்குகிறார்கள். மாதந்தோறும் சம்பளம் வந்தவுடன் முதல் வேலையாக வீட்டுக்கடன் தவணையை (EMI) செலுத்துவது நடுத்தர வர்க்கத்தினரின் கடமையாகவே மாறிவிடுகிறது.

ஆனால், எதிர்பாராத அசம்பாவிதங்கள் அல்லது இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, அந்தக் கனவு இல்லத்தின் நிலை என்னவாகும்? சமீபத்திய ஆண்டுகளில் நாம் எதிர்கொண்ட பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள், வீடுகளுக்குக் காப்பீடு செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளன.

இந்த இடத்தில் தான் 'ஹோம் லோன் இன்சூரன்ஸ்' (Home Loan Insurance) மற்றும் 'ஹோம் இன்சூரன்ஸ்' (Home Insurance) ஆகிய இரண்டும் நமக்குக் கேடயமாகப் பயன்படுகின்றன.

ஹோம் லோன் இன்சூரன்ஸ் என்பது கடன் வாங்கிய நபரின் உயிருக்கான காப்பீடு. அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் கடன் அடைபடும். ஹோம் இன்சூரன்ஸ் என்பது அந்த கட்டிடத்துக்கும், உள்ளே இருக்கும் பொருட்களுக்கும் இயற்கை பேரிடரால் ஏற்படும் சேதங்களுக்கான காப்பீடு ஆகும்.

வங்கிகளின் நெருக்கடியும் ஜப்தி அபாயமும்

வீட்டுக்கடன் வாங்கிய குடும்பத் தலைவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், எஞ்சிய கடன் தொகையைச் செலுத்துமாறு மனைவியையும் வாரிசுகளையும் வங்கிகள் நெருக்கத் தொடங்கும். போதிய வருமானம் இல்லாமல் தவணையைச் செலுத்த முடியாத பட்சத்தில், வங்கிகள் சட்டப்படி வீட்டை ஜப்தி செய்து ஏலத்துக்கு கொண்டு வரும் மோசமான சூழலையும் சந்திக்க நேரிடும்.

ஒருவர் வீட்டுக்கடன் வாங்கும்போதே, அதற்கான காப்பீட்டையும் எடுப்பது கட்டாயமில்லை என்றாலும், அது மிக அத்தியாவசியமானதாக இன்றைய நிச்சயமற்ற கால சூழலில் மாறிநிற்கிறது. இது கடன் வாங்கியவர் இல்லாத நிலையிலும், அவரது குடும்பத்தினரின் தலைக்கு மேல் உள்ள கூரையைக் காப்பாற்றும் நிம்மதியைத் தருகிறது.

இயற்கை பேரிடர்களிடம் இருந்து பாதுகாப்பு

காப்பீடு என்பது கடன் வாங்குபவரின் உயிருக்கு (Home Loan Insurance) மட்டுமல்ல, அந்த வீட்டுக்கும் (Home Insurance) அவசியமானது. புயல், அதிதீவிர மழை, வெள்ளம், நிலநடுக்கம், தீ விபத்து அல்லது தீவிரவாதத் தாக்குதல் போன்ற எதிர்பாராத காரணங்களால் வீடு சேதமடைந்தால் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒரே நொடியில் நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in