யாரிலிருந்து யாருக்கு! - வில்லங்க சான்றில் முழு விவரம்

யாரிலிருந்து யாருக்கு! - வில்லங்க சான்றில் முழு விவரம்
Updated on
1 min read

வில்லங்கமில்லா சொத்தை வாங்க சார்பதிவாளர் அலுவலகத்தில் பெறும் வில்லங்க சான்றே முக்கியம். பரிமாற்றம் செய்யப்படும் சொத்து விற்பவருக்கு சொந்தமானது தானா என்பதை அறிவதுடன், யாரிடம் இருந்து அந்த சொத்து அவருக்கு வந்தது என்ற பின்புலத்தையும் அறிவது அவசியம்.

நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திலும், இணையதளம் வழியாகவும் வில்லங்க சான்றிதழை பெற விண்ணப்பித்து பெற முடியும். குறிப்பாக புல எண், ஆவண எண் இவற்றின் மூலம் தேவைப்படும் ஆண்டுகளுக்கு சான்றிதழை பெறலாம்.

கடந்த 1975-ம் ஆண்டு முதல் ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், அந்த ஆண்டு முதல் வில்லங்க விவரங்களை கணினியில் பெற முடியும். அதற்கு முந்தைய ஆவணங்களுக்கு விண்ணப்பித்தால், உரிய தேடுதல் கட்டணம் செலுத்தி பெற வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in