

கழிவுநீர் மாசுபாட்டை முற்றிலும் அகற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலைமையில் (1992-1997), மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி - வளர்ச்சி நிறுவனம் (DRDO) ‘பயோ செப்டிக் டேங்க்’ தொழில்நுட்பத்தை கண்டறிந்தது.
எரிசக்தி உதவியின்றி இயற்கை முறையில் இயங்கும் இந்த செப்டிக் டேங்குக்கு குறைந்த அளவு இடமே போதுமானது.
இந்த பயோசெப்டிக் டேங்க் என்பது வீடுகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு ஏற்றது. மழைநீர் சேகரிப்பை போலவே கழிவுநீர் சுத்திகரிப்பும் முக்கியம்.