கணக்கெடுப்பில் விடுபட்ட ரத்தசோகை | பெண்கள் 360

கணக்கெடுப்பில் விடுபட்ட ரத்தசோகை | பெண்கள் 360
Updated on: 
1 min read

தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு வரலாற்றில் இல்லாத வகையில் 2023 – 2024ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெண்கள், குழந்தைகள் மத்தியில் நிலவும் ரத்தசோகை குறித்த தகவல்கள் பதிவுசெய்யப்படவில்லை. எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் எச்.ஐ.வி. ஹெபடைடிஸ் பி, சி போன்ற பரிசோதனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண்கள், குழந்தைகளுக்கு இருக்கும் ரத்தசோகை உடனடியாகவும் தொடர்ச்சி யாகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சினை என மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில் அண்மையில் வெளியாகியிருக்கும் தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு 6இல் ரத்தசோகை குறித்த தகவல்கள் பதிவுசெய்யப் படாதது இந்தச் சிக்கலைக் கையாள்வதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

குழந்தைகளின் ஆரோக்கிய அறிவுசார் வளர்ச்சியை ரத்தசோகை பாதிக்கிறது. பெண்களிடையே சோர்வை அதிகரித்து அவர்களின் வேலைத் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், தேசிய குடும்பநலக் கணக்கெடுப்புத் தரவின் அடிப்படையில்தான் சுகாதாரக் கொள்கைகளை அரசு வகுக்கும். பள்ளி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்குவதும் பொதுச் சுகாதாரத் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் உணவில் ஊட்டச்சத்து அளவைப் பராமரிப்பதும் இந்தத் தரவுகளின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. தற்போது ரத்தசோகை குறித்த தகவல்களைப் பதிவுசெய்யவில்லை என்பது மருத்துவர்கள் - சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in