

பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற Montane Winter Spine Challenger South ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டார் சாரா போர்ட்டர். இந்தப் பந்தயத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் பெண் குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டிக் கொடுப்பதுதான் சாராவின் நோக்கம்.
இந்தப் பந்தயத்தில் ஓடுபவர்களின் வழித்தடத்தை மற்றவர்களால் ஜிபிஎஸ் மூலம் பார்க்க முடியும். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றாலும் உடனே உதவ முடியும். போட்டியில் கலந்துகொண்ட அனைவரின் வழித்தடங்களையும் மற்றவர்களால் பார்க்க முடிந்தது. ஆனால், சாராவின் வழித்தடத்தை மட்டும் பார்க்க முடியவில்லை.
ஓட்ட தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு தொலைவை சாரா கடந்தபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக அவரைப் போட்டியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆம், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஓடிக்கொண்டிருந்த சாராவின் உயிருக்கு அச்சுறுத்தல் வந்திருந்தது. அதனால்தான் அவர் ஓடும் வழித்தடத்தை மற்றவர்கள் பார்க்க முடியாமல் மறைத்துவிட்டிருந்தனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.