குழந்தையோடு வேலைக்குச் செல்வது ஏன்?

பாத்திமா பேமன், லிடியா தோர்ப்

பாத்திமா பேமன், லிடியா தோர்ப்

Updated on: 
2 min read

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலக அளவில் வைரலானது. செனட்டர் பாத்திமா பேமன் இணையப் பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தின்போது தன் ஆறு மாதப் பெண் குழந்தை ஆலியாவைச் சுமந்தபடி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு செனட்டர் லிடியா தோர்ப் அந்தக் குழந்தையிடம் கண்ணாமூச்சி விளையாடுவது போல நடித்துக்கொண்டிருந்தார். இதனால், அந்தக் குழந்தை அமைதியாக விளையாட, அந்த இடைவேளையில் பாத்திமா தனது பேச்சை முடித்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

அனைவரும் துணைநிற்க வேண்டும்: பாத்திமா பேமனுக்கு இந்த ஆண்டு மே மாதத்தில் குழந்தை பிறந்தது. அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் குழந்தையுடனே பங்கேற்றார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “நாடாளுமன்றப் பணிகளைத்

தாய்மை பாதிக்கக் கூடாது. தாய்மை என் வாழ்க்கையின் அற்புதத் தருணங்களுள் ஒன்று. அதைப் போற்றிப் பாதுகாக்கிறேன். ஆனால், தாய்மை கடினமானது. அதற்காக யாரும் நம்மைத் தயார்படுத்துவதில்லை. உடலில் ஏற்படும் வலி, பகலாக மாறும் இரவுகள், அமைதியான தருணங்கள் எனத் தாய்மையின் பரிமாணங்கள் வெவ்வேறாக இருக்கும்.

இந்தக் காலக்கட்டத்தைச் சமாளிக்க என் கணவர், அவருடைய குடும்பத்தினர், என் குடும்பத்தினர் என அனைவரும் உறுதுணையாக இருந்தார்கள். உண்மையில் ஒரு குழந்தையை வளர்க்கச் சுற்றியுள்ளவர்களின் ஒத்துழைப்பு தேவை. இன்று நாம் அனுபவிக்கும் மருத்துவ வசதிகளும் பிற உதவிகளும் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுத்த முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தாய்மார்களை நினைத்து வியக்கிறேன்.

Loading content, please wait...

X