வழிகாட்டும் தோழிகள்! | வாசிப்பை நேசிப்போம்

வழிகாட்டும் தோழிகள்! | வாசிப்பை நேசிப்போம்
Updated on: 
1 min read

புத்தகத்தை விரித்ததுமே ஆர்வம் தலைதூக்க வரிகளுடன் உறவாடி உணர்வலையால் நனைந்து வாழ்க்கையின் முடிச்சுகளை அவிழ்த்தேன். புத்தகம் பேசுமா, தோழியாக உறவாடுமா, தனிமைத் தீயை அகற்றுமா என்றெல்லாம் கேட்டு வியப்பவர்களுக்கு, புத்தகங்களே என் உற்ற தோழிகள் என்று புன்னகைத்துக்கொண்டே கூறுவேன்.

கதைப் புத்தகம் வடிவில் அறிமுகமாகி இன்று பற்பல வடிவங்களில் என் வாழ்வை மெருகூட்டுகிறாள், என் தோழி. வெ. இறையன்புவின், ‘ஓடும் நதியின் ஓசை’ என் விடலைப் பருவத்தை நெறிப்படுத்தினாள். கல்லூரியின் ஒருவார விடுமுறையில் அதிகாலை ஐந்து மணிக்கே என் தோழன், ‘பொன்னியின் செல்வன்’ கனவிலே எழுப்புவான். இரவு 12 மணி வரை அவனுடன் உறவாடி மகிழ்ந்த நினைவுகள் நெஞ்சைவிட்டு அகலாது.

அமுதாசெல்வியின், ‘பசி கொண்ட இரவு’ பல பெண்களின் முள்பாதைகளை அறிமுகப்படுத்திச் சிந்திக்க வைத்து என் எண்ணவோட்டத்தைச் செதுக்கினாள். ‘இந்து தமிழ் திசை’ என் அன்றாட வாழ்க்கை துடிப்புடன் இயங்க உதவுகிறாள். ‘பெண் இன்று’ தொடங்கி, ‘நலம் வாழ’ வரை அனைவரும் என் அறிவை விசாலப்படுத்திச் சிந்திக்க வைக்கிறார்கள். நான் மகிழும்போதும் அழும்போதும் தனிமையில் தவிக்கும் போதும் ஆறுதலாக உடனிருக்கும் தோழிகள் புத்தகங்களே.- லெ. ட்ரசீனா, பெரியதாழை, தூத்துக்குடி.

வழிகாட்டும் தோழிகள்! | வாசிப்பை நேசிப்போம்
அம்மாவையும் கவனிக்க வேண்டும்! | கேளாய் பெண்ணே

X