கதை எழுதும் மாணவர்கள் | வாசிப்பை நேசிப்போம்

கதை எழுதும் மாணவர்கள் | வாசிப்பை நேசிப்போம்
Updated on: 
1 min read

சிறு வயது முதல் நாளிதழ்கள், காமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்பது என்னுடைய பழக்கமாக இருந்தது. என் தந்தை முற்போக்கு இயக்கத்தில் இருப்பவர் என்பதால், அவர் வாசிக்கும் புத்தகங்களையும் சிறு வயதிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். கார்ல் மார்க்ஸின் மூலதனம் உள்ளிட்ட புத்தகங் களையும் அப்போதே வாசித்திருக்கிறேன். தற்போது ஆசிரியர் பணியில் இருப்பதால் என்னிடம் பயிலும் மாணவர்களை வாசிப்பின் மீது ஆர்வம் கொள்ள வைக்கச் சிறாருக்கான புத்தகங்களை வாசிக்கப் பழக்கப்படுத்தி வருகிறேன்.

அரசு வழங்கியிருக்கும் ‘புத்தகப் பூங்கொத்து’, ‘வாசிப்பை நேசிப்போம்’ புத்தகத் தொகுப்பு, சிறாருக்கான சிறுகதைப் புத்தகங்கள் என எளிமையான கதைப் புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க உதவுகிறேன்.

முதலில் எளிமையான புத்தகங்களைக் கொடுத்தால்தான் வாசிப்பின் மீது மாணவர்களுக்கு நாட்டம் ஏற்படும் என்பதால், அதன்படி புத்தகங்களைத் தேர்வுசெய்கிறேன். மாணவர்கள் வாசித்து, புரிந்து கொண்டதை வகுப்பில் அவர்கள் மூலமாகச் சொல்லக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கதைகளை எழுத அவர்களை ஊக்கப்படுத்தி, அவர்கள் எழுதிய கதைகளை மற்ற மாணவர்கள் மத்தியில் படிக்க வைத்துப் பாராட்டுத் தெரிவிக்கும் போது மாணவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. புதிய புதிய தலைப்புகளில் கதைகள் எழுத மாணவர்கள் உற்சாகமாக முன்வருவதுடன் வாசிப்பு, படைப்புகளின் மீது அவர்கள் வெளிப்படுத்தும் ஆர்வத்தைக் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.- மா. கல்பனா பழனி, தருமபுரி

கதை எழுதும் மாணவர்கள் | வாசிப்பை நேசிப்போம்
கட்டிடக்கலையில் பெண்கள் சாதிப்பது சவாலானது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in