நாமே முன்னோடியாக இருப்போம் | வாசிப்பை நேசிப்போம்

நாமே முன்னோடியாக இருப்போம் | வாசிப்பை நேசிப்போம்
Updated on: 
1 min read

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். என் மாணவப் பருவத்தில் எங்கள் ஊர் நூலகத்துக்கு அன்றாடம் வரும் நாளிதழ்களைப் படிக்கத் தொடங்கியதே பாடப்புத்தகத்தைத் தாண்டிய உலகை அறியும் வழியாக அமைந்தது. எங்கள் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு விதமான வார, மாத இதழ்களை வாங்குவார்கள். எல்லாரும் அவரவர் வாங்கும் இதழ்களைப் பரிமாறிக்கொள்வோம். அவற்றில் வரும் கதைகள் விரிவான வாசிப்புக்கு அடித்தளமிட்டன.

‘கண்மணி’யின் அட்டைப்படமும், அதில் கதை எழுதும் பெண் எழுத்தாளர்களும் எழுத்தின் படிநிலையில் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தினர். எழுத்தாளர்கள் மணிமாலா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன் ஆகியோரின் நாவல்களைப் பெரும்பாலும் தவறவிட்டதில்லை. பின்பு மேற்படிப்பு முடித்து ஆசிரியப் பணியில் சேர்ந்ததும் தமிழின் மீதான ஆர்வம் ஊற்றாகப் பெருக்கெடுத்ததன் விளைவால் மேலும் பல எழுத்தாளர்களின் எழுத்து வலைகளில், என் வாசிப்பு சிக்கியது. அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அம்பை, சிவசங்கரி, பாவண்ணன், விந்தன் போன்றோர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in