திறன்பேசியைப் பார்ப்பது குறைந்துவிட்டது | வாசிப்பை நேசிப்போம்

திறன்பேசியைப் பார்ப்பது குறைந்துவிட்டது | வாசிப்பை நேசிப்போம்
Updated on
1 min read

எனக்கு 13 வயதாகிறது. நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது என்னுடைய வாசிப்புப் பயணம் தொடங்கியது. தொடக்கத்தில் குட்டி குட்டி புத்தகங்கள் - பக்கங்கள் குறைவாக உள்ள புத்தகங்களை வாசித்தேன். ஆறாம் வகுப்பில் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்தேன்.

ஏழாம் வகுப்பில் என்னுடைய பிறந்த நாள் பரிசாக வந்த எஸ்.ராமகிருஷ்ணனின், ‘சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்’ புத்தகம் என்னுடைய வாசிப்பு ஆர்வத்தை அதிகமாக்கியது. இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு நிறைய வாசிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். 2026 ஏப்ரல் மாதம் வரை புத்தக வாசிப்பில் 1,000 பக்கங்களைக் கடந்துவிட்டேன். இதுவரை 100 புத்தகங்களுக்கு மேல் வாசித்துள்ளேன்.

வரலாற்றுப் புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர் என் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியை ஜெய்சி‌. விழியனின், ‘மலைப்பூ’ மூலமாக நிறைய விஷயங்களை அறிந்துகொண்டேன். புத்தகங்களை வாசிப்பதால் திறன்பேசியைப் பார்க்கும் நேரம் குறைந்துவிட்டது. தமிழ் மொழிப் பாடத்தில் சுயமாக எழுத முடிகிறது. எழுத்துப் பிழைகள் குறைந்திருக்கின்றன. நிறைய புதிய விஷயங் களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். அது எனக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.

- க.தாரிகா, ஆலத்தூர், கரூர்.

திறன்பேசியைப் பார்ப்பது குறைந்துவிட்டது | வாசிப்பை நேசிப்போம்
தனியே தன்னந்தனியே... | பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in