

நான் மூன்றாம் வகுப்பு படித்தபோதுதான் எனக்குத் தமிழ் சரளமாக வாசிக்கத் தெரிந்தது. அம்மா நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அவரைப் பார்த்து எனக்கும் வாசிக்கும் ஆர்வம் வந்தது. பக்கத்து வீட்டில் வாங்கும் ஆனந்த விகடன், எங்கள் வீட்டில் வாங்கும் குமுதம், தோழிகளின் வீட்டில் வாங்கும் காமிக்ஸ் என எல்லாப் புத்தகங்களையும் வாசிப்பேன்.
கோடை விடுமுறையில் சுழற்சி முறையில் புத்தகங்கள் வாசிக்க அம்மா பணம் கட்டி ஏற்பாடு செய்வார். அன்றன்று வரும் வாரப் பத்திரிகைகளைக் காலையில் தருவார்கள். அடுத்த நாள் வேறு புத்தகம் தருவார்கள். ஆனால், புத்தகம் நமக்குச் சொந்தமாகாது.