புதிய பயணத்தின் தொடக்கம் | வாசிப்பை நேசிப்போம்

புதிய பயணத்தின் தொடக்கம் | வாசிப்பை நேசிப்போம்
Updated on
1 min read

என் பெயர் சங்கீதா. கப்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் சேரும்வரை பாடப்புத்தகத்தைத் தவிர வேறு புத்தகம் எதுவும் படித்ததில்லை.

ஒருமுறை மதுரை மாவட்டத்தில் நடந்த புத்தகக் காட்சிக்கு எங்கள் ஆசிரியருடன் சென்றிருந்தேன். புத்தகம் எதுவும் வாங்கவில்லை. இந்த நிலையில் இருந்த என்னை, எங்கள் கல்லூரியில் நுண்கலை மன்றம் சார்பாக நடத்தப்பட்ட நூல் திறனாய்வுப் போட்டி மாற்றியது. எனக்கு அந்தப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம்.

அப்போது என் வகுப்பு ஆசிரியரிடம் அது பற்றிக் கேட்டபோது நான் படித்த பாடநூல்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் பிடித்த - பிடிக்காத விஷயங்களைப் பற்றி எழுதுமாறு சொன்னார். மேலும், அந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் யார், எதற்காக, எந்தச் சூழ்நிலையில் அந்தப் புத்தகத்தை எழுதினர் என்று தெரிந்துகொண்டு அதைத் தொகுத்துப் பேசும்படி கூறினார்.

ஹென்றிக் இப்சென் எழுதிய ‘டால்ஸ் ஹவுஸ்’ (பொம்மை வீடு) என்கிற புத்தகத்தைத் திறனாய்வு செய்தேன். அந்தப் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. மேலும் பல நூல்களை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் துண்டியது. இப்போது என் பாடப்புத்தகங்களை மீண்டும் ஒருமுறை முழுமையாகப் படிக்க முயற்சி எடுத்திருக்கிறேன். விரைவில் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பேன் என்று நம்புகிறேன்.

- ஆர். சங்கீதா, திருமங்கலம்.

புதிய பயணத்தின் தொடக்கம் | வாசிப்பை நேசிப்போம்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in