காற்றில் மிதக்கும் இறகானேன் | வாசிப்பை நேசிப்போம்

காற்றில் மிதக்கும் இறகானேன் | வாசிப்பை நேசிப்போம்
Updated on
1 min read

நமக்குப் பிடித்த விஷயங்களை நினைக்கும் போதெல்லாம் மனதில் புரட்டிப் பார்ப்பதுபோல் ஜெயமோகனின் சங்கச் சித்திரங்களைப் பல ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பொழுதுகள் எல்லாம் நான் புறாவின் இறகாகவோ பன்னீர் ரோஜாவின் இதழாகவோ காற்றில் மிதக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகளை வாசிக்கும் கணங்கள் எல்லாம் நான் ஆசீர்வதிக்கப் பட்டவளாகவே உணர்கிறேன். சில புத்தகங்கள் நமது இதயத்தைத் திருடிக்கொண்டுவிடுகின்றன. வாழ்நாள் முழுவதும் அது அப்படியேதான் தொடர்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in