மூன்று பெண்களின் உரிமைக்குரல்!

மூன்று பெண்களின் உரிமைக்குரல்!

The Grammar of Silence

lR. Seshasayee

Rupa Publications

Updated on: 
1 min read

காலங்கள் மாறினாலும் பெண் படும் பாடுகள் மாறுவதில்லை. காலத்துக்கு ஏற்ப அவற்றின் வடிவங்கள் மட்டுமே மாறுகின்றன. அசோக் லேலண்ட், இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, இந்துஜா குழுமம், ஏஷியன் பெயின்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை வகித்தவரும் ஏஷியன் பெயின்ட்ஸ் நிறுவனத் தலைவருமான ஆர். சேஷசாயி எழுதியிருக்கும் ‘The Grammar of Silence’ நாவலும் இதைத்தான் தொட்டுச் செல்கிறது. ஐந்து நூற்றாண்டுகளைச் சேர்ந்த மூன்று தலைமுறைப் பெண்களின் விடுதலைக்கான குரலை இந்த நாவல் எதிரொலிக்கிறது. இலக்கிய நயமும் அரசியல் ஆழமும் பெண்ணியச் சீற்றமும் ஒருசேர இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தர்மா, வினோதினி, மேரி மூவரும் இந்தச் சமூகத்தில் தங்களது உரிமையும் இருப்பும் இருட்டடிப்பு செய்யப்படுவதை எதிர்த்துக் குரல் உயர்த்துகிறார்கள். தாங்கள் வாழும் காலக்கட்டத்தில் ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போரிடுகிறார்கள். சடங்குகளால் கட்டப்பட்ட 17ஆம் நூற்றாண்டு பிராமணச் சமூகத்தைத் தன் அறிவின் ஒளியால் எதிர்க்கிறார் தர்மா. 18ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மாராத்திய அரண்மனையில் தேவதாசியாக வாழ நேரிடும் வினோதினி தன் சமூகத்தின் அழுத்தத்தைத் தாண்டித் தன் தனிப்பட்ட அடையாளத்தை நிலைநாட்டப் போராடுகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த முத்து, கற்பனைக்கும் எட்டாத வகையில் டாக்டர் மேரியாகப் பரிணமிக்கிறார்.

தமிழ் நிலத்தில் குறிப்பாக தஞ்சாவூர் டெல்டா பகுதியில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறை, அதைக் கடந்துவந்த பெண்களின் வெற்றிக்கதை எனச் சவாலான பகுதியை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் சேஷசாயி. பெண்களுக்காக ஆண்கள் எழுதுவதில் விடுபடல்கள் இருக்கும் என்பதைத் தன் தேர்ந்த கதைசொல்லல் மூலம் பொய்யாக்குகிறார் இவர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in