மாற்றத்துக்கான அடித்தளம் | வாசகர் வாசல்

மாற்றத்துக்கான அடித்தளம் | வாசகர் வாசல்
Updated on: 
1 min read

வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் ஆண்களின் அனுபவங்களைத் தாங்கிய ‘ஆண்கள் ஸ்பெஷல்’ பகுதியைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். காலங்காலமாகப் பெண்கள் மட்டுமே செய்துவந்த வீட்டு வேலைகளில் ஆண்களும் முன்வந்து பங்கெடுப்பது, சமைப்பது என ஓய்வுபெற்ற, நடுத்தர வயது ஆண்கள் பகிரும் அனுபவங்கள் இளம் தலைமுறையினரான எங்களுக்குக் கடத்தப்படுவதோடு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம், பெண்கள் தலைமுறை தலைமுறையாக எதிர்கொள்ளும் வீட்டு உழைப்பு சார்ந்த சிக்கல்களைப் பதிவுசெய்திருந்தது நினைவுக்கு வருகிறது. அதேபோல், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக்கும் மூன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்வது போலவும், தந்தை பாத்திரம் கழுவுவது போலவும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in