தமிழ்ச் சூழலில் செம்மையாக்கம்

தமிழ்ச் சூழலில் செம்மையாக்கம்
Updated on: 
2 min read

தெற்கு சூடானைச் சேர்ந்த எழுத்​தாளர் தபான் லோ லியோங் எழு​திய ‘உணவு’ (தமிழில்: ரவிக்​கு​மார்) கதை​யில், கைக் குழந்​தை​யான தன் தங்​கையை மலைப்பாம்பு விழுங்​கு​வது கண்​டு, ‘பாம்​பு’ என்ற சொல்லை அறி​யாத சிறுமி ‘அது சாப்​பிட்​டு​விட்​டது’ என்று சொல்​வாள்.

ஏனோ செம்​மை​யாக்​கம் தொடர்​பாக யோசித்​த​போது இந்​தக்கதை நினை​வுக்கு வந்​தது. மொழி வளமும், அதன் பயன்​பாடும் எவ்​வளவு முக்​கி​யம் என்​பதை இக்​கதை அடிக்​கடி நினை​வுறுத்​துகிறது. பொது​வாக, தமிழ்ச் சூழலில் பிழை திருத்​த​மும் செம்​மை​யாக்​க​மும் ஒன்​று​போலவே கருதப்​படு​கின்​றன. இந்த விவாதம் நெடு​நாட்​களாக நடந்​து​வரு​கிறது. ஆங்​கிலத்​தில் செம்​மை​யாக்​குநரின் பெயரை அட்​டைப்​படத்​திலேயே குறிப்​பிடும் நிலையை ஒப்​பிட்​டுச் சில எழுத்​தாளர்​கள் அவ்​வப்​போது எழு​தி வரு​கிறார்​கள்.

புத்​தா​யிரத்​துக்​குப் பிறகு எழுத்​தாளர்​களின் வரவு கணிச​மாகி​யிருக்​கும் சூழலில், தேர்ந்த செம்​மை​யாக்​குநர்​களின் தேவை​யும் அதி​கரித்​திருக்க வேண்​டும். ஆனால், அப்​படி நடக்​க​வில்​லை. மாறாக, எழுத்​தாளர் - செம்​மை​யாக்​குநர் உறவு பலவீனமடைந்​திருக்​கிறது. புதி​தாக எழுத வருபவர்​கள் கூட இதற்கு விதி​விலக்​கல்ல. எழுத்​துப் பிழை, தகவல் பிழை என்​பவற்​றைத் தாண்டி படைப்​பில் வேறெந்த மாற்​றத்​தை​யும் செய்​யக்​கூ​டாது என அடம்​பிடிக்​கும் எழுத்​தாளர்​கள் பலர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in