தரமும் நேரம் தவறாமையும் வெற்றி தரும்! | முகங்கள்

தரமும் நேரம் தவறாமையும் வெற்றி தரும்! | முகங்கள்
Updated on: 
2 min read

காரைக்குடியில் பிறந்து, திருமணம் முடிந்து ஈரோட்டில் வசித்து வருகிறார் பிரவீணா. சுயதொழிலில் ஜொலிக்க வேண்டும் என்கிற தனது சிறுவயது ஆர்வத்தால், ‘சிட்டி பேக்ஸ்’ (City Bags) மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். தொடக்கத்தில், வீட்டில் இருந்தே சிறிய அளவில் இந்தத் தொழிலைச் செய்துவந்தவர், கடந்த ஆண்டு தனியாக உற்பத்தி அலகைத் தொடங்கித் தொழிலை விரிவுபடுத்தியுள்ளார்.

தன் சுயதொழில் ஆர்வத்தை நிறைவேற்றுவதற்கான பொருளாதார வசதி, வழிகாட்டல், தொழில் அறிவு, அனுபவம் என எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்தபடியே சாக்லெட், பேக்கரி உணவு வகைகள், சமையல் எனப் பலவகை தொழில்களைச் சிறிய அளவில் முயன்று பார்த்துள்ளார் பிரவீணா. அவை பெரிதாகக் கைகொடுக்காதபோதும் தன் முயற்சியை அவர் கைவிடவில்லை. அந்த நேரத்தில் ரேடியோவில் ஒலிபரப்பாகிய விளம்பரத்தின் மூலம் கனரா வங்கியின் ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி திட்டத்தில் இணைந்து சணல் பைகள் தயாரிக்கப் பயிற்சி பெற்றார்.

போட்டியே இல்லை: தான் பயிற்சி பெற்றதை வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்தார். அது அவரது வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்க வில்லை. ஸ்டேட்டசைப் பார்த்த அவருடைய தோழி, தன் மகன் திருமணத்துக்கு வருவோருக்குக் கொடுக்க 1,800 பைகளுக்கு ஆர்டர் கொடுத்தார். முதல் ஆர்டரே அதிக எண்ணிக்கையில் கிடைத்ததால், கடும் சிரத்தையுடன் தயாரித்து பைகளைக் குறித்த நேரத்திலும் தரமானதாகவும் தயாரித்து அனுப்பினார்.

அது கொடுத்த நம்பிக்கைதான் இந்தத் தொழிலை முறைப்படி செய்வதற்கு உந்துதலாக அமைந்ததாகக் கூறுகிறார் பிரவீணா. தாம்பூலப் பைகளில் மட்டுமே கவனம் செலுத்தினால் திருமணக் காலத்தில் மட்டுமே ஆர்டர் கிடைக்கும். மொத்த வியாபாரத்தைத் தேர்ந்தெடுத்தால் மாதத்தில் சில நாள்கள் வேலை இல்லாமல் போகும். இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் என யோசித்த பிரவீணா, பத்துப் பைகள் கேட்டாலும் தைத்துக் கொடுப்பது என முடிவெடுத்தார்.

Loading content, please wait...

X