இல்லத்தரசிகளுக்குப் பகுதிநேர வேலை | முகங்கள்

இல்லத்தரசிகளுக்குப் பகுதிநேர வேலை | முகங்கள்
Updated on
2 min read

குடும்பச் சூழ்நிலையால் வேலைக்குச் செல்ல முடியாமல் இருக்கும் படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது ‘ஷ்ரத்தா மானு’ அமைப்பு. பன்னிரண்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த பெண்களுக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற பகுதிநேர வேலையை இவர்கள் ஏற்படுத்தித் தருகிறார்கள். அந்த வேலையும் ஏழைக் குழந்தைகளின் கல்வி மேம்பாடு சார்ந்ததாகவே இருப்பது சிறப்பு.

இந்த வேலையைச் செய்வதற்கு இடமும் அர்ப்பணிப்பும் இருந்தால் போதும் என்கிறார் ‘ஷ்ரத்தா மானு’ அமைப்பின் நிறுவனர் மதுமதி. கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இவர், எதைச் செய்வதாக இருந்தாலும் அதை தேசத்தின் - குழந்தைகளின் நலனுக்காகச் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த அமைப்பை நடத்திவருகிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in