பகிர்ந்து செய்வதே மகிழ்ச்சி! | ஆண்கள் ஸ்பெஷல்

பகிர்ந்து செய்வதே மகிழ்ச்சி! | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on: 
1 min read

எங்களுக்கு இரண்டு மகள்கள். ஒருவருக்கு வெளியூரில் அரசு வேலை. இன்னொருவர், கோவையில் படித்துக்கொண்டிருக்கிறார். 60 வயதாகும் நான் தனியார் நிறுவனத்தில் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளேன். மகள்கள் இருவரும் பள்ளிக்குச் சென்ற காலத்திலிருந்தே, காலையில் சமையல் வேலை மனைவியுடையது.

மற்ற வேலைகளான தண்ணீர் பிடிப்பது, பால், காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்கி வருவது, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, வீட்டைப் பெருக்குவது எல்லாம் என் வேலை. மனைவி் துணி துவைத்தால் காய்ந்த பிறகு அவற்றை எடுத்து மடித்து வைப்பது என் வேலை. வாரச் சந்தைக்குப் போவதும் துணிகளை அயர்ன் செய்வதும் என் வேலைதான். இப்படி நாங்கள் இருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்வதால் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் நகர்கிறது.

- கே.ஆர். அசோகன், கிட்டம்பட்டி.

பகிர்ந்து செய்வதே மகிழ்ச்சி! | ஆண்கள் ஸ்பெஷல்
விடாமல் சமையல் பழகும் வேதாளம் நான்! | ஆண்கள் ஸ்பெஷல்

X