மனைவிக்கு உதவுவதே மனநிறைவு! | ஆண்கள் ஸ்பெஷல்

மனைவிக்கு உதவுவதே மனநிறைவு! | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on
1 min read

எனக்கு 66 வயது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு எட்டு ஆண்டுகளுக்கு முன் பணி நிறைவு பெற்றேன். வேலைக்குச் செல்லும்போது என் மனைவி கீதாவுக்கு வீட்டு வேலைகளில் நான் உதவியது இல்லை. மொத்த பாரத்தையும் அவர் ஒருவரே சுமந்தார். அது எனக்கு வருத்தமாக இருந்தது. தற்போது, காலை எழுந்தவுடன் பால் வாங்கி வருகிறேன். பிறகு வாஷிங் மிஷினில் துணிகளைத் துவைத்துக் காயவைக்கிறேன். அன்றைய சமையல் என்ன என்று மனைவியோடு சேர்ந்து முடிவு செய்து காய்கறிகளை நறுக்கித் தருகிறேன்.

வாரம் ஒரு முறை இட்லிக்கு மாவரைப்பதும் என்னுடைய வேலைதான். மாலையில் கடைக்குச் சென்று அடுத்த நாள் சமைக்கத் தேவையானவற்றை வாங்கி வருவேன். இப்படி வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வதால் மனைவிக்கு மிகவும் மகிழ்ச்சி. மற்றவர்களும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள நினைத்தால் எளிமையான இனிப்பில் இருந்து தொடங்கலாம். அதற்கான குறிப்பையும் தருகிறேன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in