அம்மாவிடம் கற்றது, அப்பாவிடம் பெற்றது! | ஆண்கள் ஸ்பெஷல்

அம்மாவிடம் கற்றது, அப்பாவிடம் பெற்றது! | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on
1 min read

நான் பள்ளியில் படித்தபோதே எள்ளுப்பொடி இடிப்பது, ரசம் வைப்பது, பூரி - சப்பாத்திக்கு மாவு பிசைவது, தோசை வார்ப்பது எப்படி என்று என் அம்மாவிடம் கற்றுக்கொண்டேன். ஞாற்றுக்கிழமைகளில் சந்தைக்குச் சென்று மீன்களின் செதில்களைப் பார்த்து வாங்குவது, ஆட்டுக்கறியை இளம் சிவப்பாக வாங்குவது, நாட்டுக்கோழியை எப்படிப் பார்த்து வாங்குவது, நல்ல காய்கறிகளை எப்படி வாங்குவது என்று என் அப்பாவிடம் கற்றுக்கொண்டேன். என் மனைவியும் வேலைக்குச் செல்வதால் சில நேரம் மாலை திரும்ப வரத் தாமதமாகும்.

அப்போது சப்பாத்திக்குத் தக்காளி தொக்கு அல்லது குருமா செய்வது, தோசை வார்ப்பது, சட்னி அரைப்பது என்று நானே செய்துவிடுவேன். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர்கள். அண்மையில் பேல் பூரி, ஆலு பராத்தா போன்றவற்றோடு மேலும் சில வட இந்திய உணவு வகைகளையும் செய்வதற்கு யூடியூபில் பார்த்துக் கற்றுக்கொண்டேன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in