பிரித்துக்கொண்டால் பிரச்சினை இல்லை | ஆண்கள் ஸ்பெஷல்

பிரித்துக்கொண்டால் பிரச்சினை இல்லை | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on
1 min read

ஒரு வீட்டில் சமைப்பது, வீட்டைப் பெருக்குவது, துணி துவைப்பது உள்பட அனைத்து வேலைகளையும் பெண்களே செய்கிறார்கள். இந்த வேலைகள் எல்லாம் பெண்களுக்காகவே ஒதுக்கப்பட்டவை என்பதைப் போலவே சித்தரிக்கப்படுகிறது.

ஆனால், ஒரு பெண்ணின் வலியை நாம் உணர்ந்து வீட்டு வேலைகளைச் சரிபாதி பிரித்துக்கொண்டு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மனைவி சமைக்கும்போது காய்கறி நறுக்கிக் கொடுப்பது, வீட்டைப் பெருக்கும்போது பொருள்களை எடுத்து வைப்பது, துணி துவைக்கும்போது துவைத்த துணிகளைக் காய வைப்பது போன்ற சிறு சிறு வேலைகளை ஆண்கள் செய்தால் பெண்களுக்கும் ஓரளவுக்கு வேலைப்பளு குறையும். குடும்பத்தில் சண்டை சச்சரவும் குறையும். - சென்னா, அரூர்.

பிரித்துக்கொண்டால் பிரச்சினை இல்லை | ஆண்கள் ஸ்பெஷல்
பெண்ணுக்குக் கல்வியே முக்கியம் | ஆயிரத்தில் ஒருவர்
Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in