குழந்தைகளின் உலகத்தைப் பாதுகாப்போம் | காற்றாய் எழுவேன் 08

குழந்தைகளின் உலகத்தைப் பாதுகாப்போம் | காற்றாய் எழுவேன் 08
Updated on: 
3 min read

“நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல்.”

அனு கேட்கையில் மரப்பாச்சி மௌனமாய் விழிக்கும்.

“எனக்கு யாரிருக்கா? நான் தனி.”

உமா மகேஸ்வரி எழுதிய ‘மரப்பாச்சி’ சிறுகதையில், ஒரு வளரிளம் பெண்குழந்தை தன் மரப்பாச்சி பொம்மையோடு பேசுவதாக அமைந்த உரையாடல் இது. அந்தக் குழந்தை எதிர்கொள்கிற தனிமை, உடல் மாறுபாடுகள் குறித்த புதிர்த்தன்மை என வளரிளம் பருவத்தின் உணர்வுத்தளங்களைப் பேசும் இந்தக் கதை, மனதில் உள்ளதை உள்ளவாறே வெளிப்படுத்தும்போது, சமூக மதிப்பீடுகளைக் கொண்டு அறிவுரை வழங்காமல் அப்படியே கேட்டுக்கொள்ளும் உணர்வுரீதியான துணையை அவர்கள் வேண்டுகிறார்கள் என்கிறது.

சிறுமிகளின் கதை: பருவமெய்திடாத அந்தச் சிறுமி, அத்தை வீட்டுக்குச் செல்லும்போது மாமாவால் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள். அவளது உலகில் ஆணும் பெண்ணும் இணைவது குறித்து, ‘முகமும் முகமும் பக்கத்தில் வரும்; உடனே ஒரு பூவும் பூவும் நெருங்கி ஆடும்; வானில் புதிய பறவைகள் சிறகடிக்கும். நீலமேகமும் பசும் புல்வெளியும் ஒட்டி உறவாடும்; திசைகள் எங்கும் குழலிசை இனிமையாகப் பெருகும்; அப்படித்தானே அந்தப் பாட்டில் வரும்?’ என்பதாக இடம்பெற்ற சித்திரம், அவள் எதிர்கொள்ளும் வன்முறையால் சிதைந்து சுக்குநூறாகும்.

Loading content, please wait...

X