எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதி வென்றது!

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதி வென்றது!
Updated on: 
2 min read

சில வெற்றிகள் கடந்த காலப் போராட்டங்களையும் நம்மோடு பயணித்தவர்களையும் நினைவுபடுத்திக் கண்களைக் கலங்க வைக்கும். அப்படிப்பட்ட வெற்றிதான் திருபுவனம் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 2026 நவம்பர் 21 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் உள்ள திருபுவனத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த, பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் 21 வயதில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் சமூகத்தையே உலுக்கியது.

விருந்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சின்னப்பா என்பவர் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். குளிர்பானம் குடிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். அங்கே ஜவுளிக்கடை முதலாளி கார்த்தியும் இருந்துள்ளார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நினைவிழந்த அந்தப் பெண் மயக்கம் தெளிந்தபோது, வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கதறியுள்ளார்.

வீட்டில் ரத்தப்போக்குடன் மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவலறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உடனடியாகத் தலையிட்டது.

தனியார் மருத்துவமனையில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பின்னர் அரசு மருத்துவமனையில் தனியாகப் பேசியபோதுதான், அவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தெரியவந்தது. நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம் என உறுதியெடுத்தோம்.

Loading content, please wait...

X