பெண்குழந்தைகள் மறக்க மாட்டார்கள்

சர்வதேசப் பெண்குழந்தைகளுக்கான நாள் - அக்டோபர் 11
பெண்குழந்தைகள் மறக்க மாட்டார்கள்
Updated on: 
1 min read

உலகில் ஒவ்வொரு மூன்று நொடியிலும் ஒரு பெண்குழந்தைக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. உலக அளவில் பெண்குழந்தைகள் எதிர்கொள்ளும் இத்தகைய நெருக்கடிகள்தான், ஐக்கிய நாடுகளின் அவை ‘பெண்குழந்தைகளுக்கான சர்வதேச நாள்’ (அக்டோபர் 11) கொண்டாட வழிவகுத்தன. பெண்குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த அறிதலை ஏற்படுத்துவது, தீர்வுகளை முன்வைப்பது, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது ஆகியவற்றை நோக்கிப் பன்னாட்டுச் சமூகத்தை நகர்த்துவதே இதன் நோக்கம்.

பெண் குழந்தைகளுக்கான சர்வதேச நாளின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள், ‘குழந்தைத் திருமணத்தைத் தடுத்தலும் பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக முதலீடு செய்தலும்’தான்.

இந்திய நிலவரம்: சிறுமிகளின் கல்விக்குத் தடை, உடல்நலத்துக்குப் பாதிப்பு, குடும்ப வன்முறை, திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை இழப்பது ஆகிய பிரச்சினைகளுக்கு மூலக் காரணமாகக் குழந்தைத் திருமணம் அமைகிறது. 2021 நிலவரப்படி இந்தியாவில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைத் திருமணங்கள் (41.6%) நடைபெற்றிருக்கின்றன. இரண்டாவது இடத்தில் பிஹாரும் (40.8%) மூன்றாவது இடத்தில் திரிபுராவும் (40.1%) உள்ளன. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினை 12.8%ஆக உள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in