

இந்திய ஜனநாயகத்தின் இதயத்துடிப்பான நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவை களிலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு என்பது வெறும் எண் அல்ல; அது பல தசாப்த கால போராட்டத்தின் பலன். 2023இல் நிறைவேற்றப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்குப் பிறகு அதாவது 2029இல் முழுமையாக அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சட்டம் தள்ளிப்போகிறதே’ என்று நாம் சோர்வடையத் தேவையில்லை. காலம் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த இடைவெளி, நம்மை நாம் செதுக்கிக் கொள்வதற்கான ஒரு தயாரிப்புக் காலம்!