ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!

ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!
Updated on
1 min read

98ஆவது ஆஸ்கர் திரைப்பட விருது விழா அண்மையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. 1929இல் முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளை நெருங்க இருக்கும் இந்தத் தருணத்தில்தான் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதுக்கு முதல் முறையாக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘சின்னர்ஸ்’ எனும் திரைப்படம் 16 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவுக்காகத்தான் ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவுக்கு (Autumn Durald Arkapaw) ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான களமாக மட்டும் பார்க்கப்படும் ஆணாதிக்கம் நிறைந்த தொழில்நுட்பப் பிரிவின்கீழ் வழங்கப்படும் இவ்விருதைப் பெறும் முதல் பெண், முதல் ஆப்ரிக்கர் ஆட்டம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in