கருத்தான கண்காட்சி | வானவில் பெண்கள்

கருத்தான கண்காட்சி | வானவில் பெண்கள்
Updated on
1 min read

‘மாய யதார்த்தவாதக் கண்ணோட்டத்தில் சமூக அநீதியைப் புரிந்துகொள்ளுதல்’ (Exploring systemic injustice through magical realism) என்கிற தலைப்பில் சென்னை திருவான்மியூர் மாட வீதிகள் சதுக்கத்தில் கலைக் கண்காட்சி ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார் 18 வயதேயான கல்லூரி மாணவி ச.ப. சம்ருதா.

பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்துவருகிறார் சம்ருதா. சிறு வயது முதலே கலையின் மீது ஆர்வம் கொண்ட இவர், வழக்கமான பாணியில் அல்லாமல் கண்காட்சியில் சில புதுமைகளைப் புகுத்தியுள்ளார். கடந்த ஜூலை 25, 26ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை 200க்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

“மக்கள் அனைவரும் சாதி, மத, நிற, பாலின வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இக்கருத்தை வலியுறுத்த ஒரு சமூகமாக ஒன்றிணைய வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். கலந்துரையாடல், ஆரோக்கியமான விவாதங்களின் வழியே மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அந்த எண்ணத்தில்தான் கலைக் கண்காட்சியை நடத்தினோம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in