கண்ணுக்குத் தெரியாத சுமை | என் பாதையில்

கண்ணுக்குத் தெரியாத சுமை | என் பாதையில்
Updated on: 
1 min read

நடுநிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், அலுவல் பணிகள் என்று தினமும் பல பொறுப்புகளுடன் ஓடிக்கொண்டிருப்பதே என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. ‘நான்தான் குடும்பத்துக்காக அதிகமாக உழைக்கிறேன்; வீட்டில் இருக்கும் என் மனைவிக்கு என்ன பெரிய சுமை இருக்கப்போகிறது?’ என்கிற எண்ணம் சிலநேரம் எனக்குள் வந்திருக்கிறது. ஆனால், வாழ்க்கையின் பல தருணங்கள் அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பதை எனக்கு உணர்த்தியுள்ளன.

என் மனைவி இல்லத்தரசி. வேலைக்குச் செல்வதில்லை என்பதற்காகவே அவருக்கு வேலை இல்லை என்று சொல்லிவிட முடியாது. காலையில் எழுந்த நொடியில் இருந்து இரவுவரை குடும்பத்துக்கான எண்ணற்ற பொறுப்புகள் அவரைச் சுற்றியே இருக்கின்றன. சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது, என் மகனின் படிப்புக்கு உதவுவது, குடும்பத்தில் உள்ள பெரியவர்களைக் கவனிப்பது என அவருக்கு ஓய்வே இருப்பதில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in