பயத்தில் எடுத்துவிடுகிற விபரீத முடிவுகள்! | சேர்ந்தே சிந்திப்போம் 17

பயத்தில் எடுத்துவிடுகிற விபரீத முடிவுகள்! | சேர்ந்தே சிந்திப்போம் 17
Updated on
3 min read

ரொம்ப முக்கியமான, அழுத்த மான, ஆழமான, வருத்தம் தரக்கூடிய விஷயத்தைப் பற்றித்தான் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். போன வாரம் நான் குறிப்பிட்ட சாருவுக்கு அன்பான அப்பா, அம்மா, மிகவும் வசதியான குடும்பம். வீட்டில் இரண்டு கார்கள். அவளுக்கு 18 வயது ஆனதுமே ஸ்கூட்டி வாங்கித் தந்தார்கள். ஒரே பெண், நன்றாகப் படிக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தி வளர்த்தார்கள்.

அவளும் அதிபுத்திசாலி. “ஆன்ட்டி, நான் ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி, கலெக்டராகி பெரிய பொறுப்பு வகிப்பேன். இல்லையென்றால் மத்திய அரசுக்குப் பொருளாதார ஆலோசகராக ஆகி நாட்டுக்கு நல்லது செய்வேன்” என்று என்னிடம் சொல்லியிருக்கிறாள்.

கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண் டிருந்தாள். செமஸ்டர் தேர்வின்போது அவள் ‘காப்பி’ அடித்துவிட்டாள் என்று பேராசிரியர் குற்றம் சாட்டியிருக்கிறார். தேர்வைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, “நீ வீட்டுக்குப் போ. பிரின்சிபலிடம் ஆலோசித்துவிட்டு நாளைக்கு உன் பெற்றோரிடம் பேசுகிறோம்.

எப்படி இருந்தாலும் நீ தேர்வு எழுத முடியாது” என்று கறாராகக் கூறியிருக்கிறார்கள். 18 வயது நிரம்பிய, பெரிய பெரிய கனவுகளோடு வாழ்ந்த சாரு, தேர்வில் தில்லுமுல்லு செய்துவிட்டாள் என்கிற முத்திரை அவள் மேல் குத்தப்பட்டது.

உண்மையிலேயே அவள் காப்பி அடித்து எழுதினாளா இல்லையா என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. யாரிடமும் எதுவும் பேசாமல் உடைந்துபோன சாரு, கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வராமல் தன் தோழியின் அப்பார்ட்மென்ட்டுக்குப் போய் ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டாள்.

மீண்டுவிட்ட சிறுவன்: பொருளாதாரத்தில் மத்தியத்தரத்தில் இருக்கும் குடும்பங்களில்தான் இது நடக்குமா என்றால் இல்லை. எனக்குத் தெரிந்த வீட்டில் தோட்ட வேலை செய்கிறவரின் மகன் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக்கொண்டிருந்தான். 15 வயதுதான் இருக்கும். வீட்டில் அவனுடைய அக்காவுடன் அவனை எப்போதும் ஒப்பிட்டபடியே இருப்பார்கள். அக்கா, நன்றாகப் படித்து அனைத்திலும் சிறந்தவளாக இருந்தாள்.

தோட்டவேலை செய்யும் இந்தக் குழந்தையின் பெற்றோருக்கு என்ன விழிப்புணர்வு இருக்கப்போகிறது? “அக்காவைப் பாரு. அவள் நம் கஷ்டம் புரிந்து எவ்வளவு நன்றாகப் படிக்கிறாள்? நீங்கள் இரண்டு பேரும் நன்றாகப் படித்தால்தானே வாழ்க்கையில் முன்னேற முடியும்? இல்லையென்றால் எங்களைப் போலத் தோட்டவேலைதானே செய்ய முடியும்?” என்றெல்லாம் விடாமல் அறிவுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in