

30 வயதில் கொண்ட லட்சியத்துக்காக 50 வயதில் பட்டம் பெற்று 63 வயதில் லட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறார் அமண்டா பேரி.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அமண்டா, ஒன்பது வயதில் அப்பாவை இழந்தார். அதனால் அப்பாவைப் பற்றி அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை. 30 வயதில் ஒருநாள் பழைய டிரங்க் பெட்டிகளை ஆராய்ந்துகொண்டிருந்தார். அப்போதுதான் 1948இல் அவரின் தந்தை ஜார்ஜ் பேரி, ஆராய்ச்சிக்காக அண்டார்க்டிகாவுக்குச் சென்று திரும்பியதை அறிந்துகொண்டார்.