அம்மாக்களின் கவனத்துக்கு...

அம்மாக்களின் கவனத்துக்கு...
Updated on
2 min read

பதினைந்து வயது சிறுமியவள். இவ்வுலகத்தின் மீது தனக்கான இருப்பை உறுதிப்படுத்த மிகவும் ஆசைப்படுகிறாள். ஆனால், இந்த இருப்பை அருவருப்பாகவும் பாதை மாறிப்போகிறாள் எனவும் அவளுடைய அம்மா தடைபோடுகிறார்.

இந்த நவீன யுகத்திலும் பெண் பிள்ளைகளின் முதல் முடக்குச் சக்தியாகப் பல வீடுகளில் அம்மாவே இருக்கும் வகையில் சமூக அமைப்பு இருக்கிறது என்பதைப் பல சிறுமிகளின் வாழ்க்கை முடக்கங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

குறும்படம் எடுக்கும் ஆசையில் எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் பிள்ளைகள் முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். இடையில் அது நின்று போனது. என்ன பிரச்சினை என்று கேட்டால், “காலம் கெட்டுக் கிடக்கு வெளியில போகாத” என்று அம்மா முடக்கிவிட்டார் சக சிறுமியை.

காலம் ஒருபோதும் கெட்டுப்போகவில்லை. சமூகத்தில் பல மனிதர்கள் விஷங்களாகவே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால்தான் காலத்தின் மீது பழியைப் போட்டுவிடுகிறோம். எத்தனை எத்தனை பெண்கள் இந்த விஷக்களைகளைப் பதராக்கித் தங்கள் கால்களுக்குக் கீழே பொசுக்கிப் போட்டுவிட்டு மேலே எழுந்து வந்தார்கள் என்பதை அம்மாக்கள், பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை.

சமூகத்தின் தீமைகளை மட்டும் சொல்லிச் சொல்லி அவர்களை முடக்கிவிட்டு அப்படியென்ன சாதிக்கப்போகிறார்கள்? இங்கே நிறைய கண்ணாடித்துண்டுகள் கிடக்கின்றன. குத்திக் கிழிக்கும் கூரான முள்கள் நிற்கின்றன. விஷத்தை அன்பு போலத் தரும் போலிகள் இருக்கின்றன.

உடலைப் பறிக்கும் கொடியவர்கள் வாழ்கிறார்கள். கொலைக்களத்துக்குக் கூட்டிப்போகும் கொடூரங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டிக்கொண்டு, ‘நீ மேல வா... நான் உனக்காகக் காத்திருக்கிறேன்’ என்று சொல்ல முடியவில்லை. ஒரு பேரன்பின் வெளிப்பாடு, ‘இருக்கிற நிலையிலே தன் மகளை ஏற்றுக்கொள்வதாகவே’ இருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in