நிலைக்குழுவின் ஆய்வும் சட்டமன்ற விவாதமும் | அரசியல் அறிவோம் 7

நிலைக்குழுவின் ஆய்வும் சட்டமன்ற விவாதமும் | அரசியல் அறிவோம் 7
Updated on
2 min read

சட்டப்பேரவையில் மசோதா அறிமுகமாகி அதை நிலைக் குழுவுக்கு அனுப்ப அவைத் தலைவர் முன்மொழிந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், “ஆளும்கட்சிக்குப் பெரும்பான்மை கைவசம் இருக்கிறது; கையை உயர்த்தினால் போதும், மசோதா சட்டமாகிவிடும். அப்படியிருக்க இதை நிலைக்குழுவுக்கு அனுப்பி எதற்கு இந்தக் காலதாமதம்?” என்று வினவினார்.

அவைத்தலைவர் நிதானமாக, “மாண்புமிகு உறுப்பினரே, ஆய்வு என்பது தடையன்று; அது சட்டத்தின் ஆயுள் காப்பீடு. இது வெறும் ஏட்டளவில் நிற்கும் சட்டமல்ல. எதிர்காலத் தலைமுறையின் வாழ்வை நிர்ணயிக்கும் வரலாற்றுச் சாசனம். உள்கட்டமைப்பு, நிதி, நிபுணர்களின் ஆலோசனை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, செம்மையான சட்டமாக வடிக்கவே நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது” எனப் பதில் கூறினார். கூர்ந்த ஆய்வுகளுக்குப் பிறகு நிலைக்குழு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in