தாகத்தின் குரல்: சட்டமன்றத்தில் ஒரு தர்மயுத்தம் | அரசியல் அறிவோம் 4

தாகத்தின் குரல்: சட்டமன்றத்தில் ஒரு தர்மயுத்தம் | அரசியல் அறிவோம் 4
Updated on
2 min read

இருள் பிரியாத அதிகாலை. உலகமே உறக்கத்தில் இருக்க, பர்கூர் மலைச் சரிவுகளில் மட்டும் சலசலப்பு. அது அருவியின் ஓசையல்ல; தலையில் சுமந்த காலிக்குடங்களோடு மலை ஏறி இறங்கும் பெண்களின் மூச்சிரைப்பு. பள்ளிப் பையையும் பால்யப் பருவத்தையும் தொலைத்துவிட்டு, நீருக்காக நீளும் அந்த நீண்ட வரிசைதான் தமிழரசி எனும் சமூகப் போராளியின் நெஞ்சில் அக்னியைத் தூண்டியது.

சட்டமன்றத்தில் எழுந்த அறச்சீற்றம்: சட்டமன்றத்தின் மாண்புமிகு சபாநாயகரை நோக்கித் தனது வாதத்தை முன்வைத்தார் தமிழரசி. “ஐயா, இது வெறும் தண்ணீர்ப் பிரச்சினை அல்ல; இது பெண்களின் ஆரோக்கியம், குழந்தைகளின் கல்வி உரிமை, மானுடச் சமத்துவம் சார்ந்த வாழ்வாதாரப் போராட்டம்.”

ஒரு நாளில் நான்கு முறை, ஏழு கிலோமீட்டர் தூரம் முள் நிறைந்த பாதையில் குடம் சுமக்கும் பெண்களின் வலியையும் அதனால் பாதியிலேயே நிற்கும் பெண் குழந்தைகளின் கல்வியையும் அவர் ஆணித்தரமாகப் பதிவுசெய்தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in