புகுந்த வீடு தைரியம் தந்தது! | ஆயிரத்தில் ஒருவர்

புகுந்த வீடு தைரியம் தந்தது! | ஆயிரத்தில் ஒருவர்
Updated on: 
1 min read

மூன்று பெண் குழந்தைகளில் ஒருத்தியாக, மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். குடும்பச் சூழ்நிலையால் வெளி உலகத்தைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளவோ, பல்வேறு மனிதர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெறவோ எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. படிப்பில் ஆர்வம் இருந்ததால் நன்றாகப் படித்தோம்.

ஆனால், புத்தகங்களுக்குள் இருந்த அளவுக்கு வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் அனுபவமும் வெளிப்பார்வையும் எங்களுக்கு இல்லை. அதனால், எனக்குள் எப்போதும் ஒரு தயக்கம், பயம், தாழ்வு மனப்பான்மை இருந்தது. புதிய மனிதர்களிடம் பேசுவது, தானாக முன்வந்து கருத்துச் சொல்வது, ஒரு கூட்டத்தில் தைரியமாக நிற்பது போன்றவை எனக்குக் கடினமாக இருந்தன. படிப்பு இருந்தும் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான துணிவும் தன்னம்பிக்கையும் என்னிடம் குறைவாகவே இருந்தன.

சமூக, அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு குடும்பத்துக்கு மருமகளாகச் சென்றேன். அது முற்றிலும் புதிய உலகமாக இருந்தது. பல்வேறு மனிதர்களுடன் பழகுவது, சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வது, கருத்துகளை வெளிப்படுத்துவது என அனைத்துமே எனக்குத் தொடக்கத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தின.

Loading content, please wait...

X