வாசிப்பை நேசிப்போம்- அண்ணா ஊன்றிய விதை

வாசிப்பை நேசிப்போம்- அண்ணா ஊன்றிய விதை
Updated on
1 min read

எனது இளமைக் கால வாசிப்பை ஊக்குவித்தவர்கள் அம்மாவும் அப்பாவும் என்றால் அறுபது வயதில் என் வாசிப்பை ஊக்குவித்தவர் என் மகன். அந்தக் காலத்தில் வெளியான சிறுவர் இதழான ‘கண்ண’னிலிருந்து தொடங்கியதுதான் என்னுடைய வாசிப்பு.

அம்மா படிக்கும் ராமாயணம், மகாபாரதம், அப்பா படிக்கும் தினசரிப் பத்திரிகை எனத் தினமும் எதையாவது படித்துக்கொண்டிருப்பது என் வாடிக்கை. பிறகு கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா, லக்ஷ்மி, ஆர்.சூடாமணி போன்றவர்களின் நாவல்களைப் படித்திருக்கிறேன். ஆங்கில நாவல்களையும் வாசித்ததுண்டு. அண்ணா விதைத்த விதை என் மகனிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக அவன் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்கள் அவனுக்கு மட்டுமன்றி என்னிடமும் பக்குவத்தை ஏற்படுத்தியுள்ளன. எம்.எஸ்.உதயமூர்த்தி, கோப் மேயர், நெப்போலியன் ஹில், ரோண்டா பைரன் ஆகியோரின் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். ரோண்டா பைரனின் ‘சக்தி’, ‘மாயாஜாலம்’ இரண்டும் எனக்குள் நன்றியுணர்வையும் அன்பையும் மென்மேலும் பெருக்குவதற்கு வித்திட்டன. வாழ்க்கை என்பது போராட்டமல்ல; அது கவிதை, இனிமை, அழகு, அன்பு, நம்பிக்கை என்பதை வாசிப்பே எனக்கு உணர்த்தியது.

- ந.கோமதி, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in