

எட்டு வயதில் ‘சுதேசமித்திரன்’ படிக்க ஆரம்பித் தேன், வாசிப்போ 73 வயதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கல்கண்டு முதல் கல்வெட்டுவரை படித்துக்கொண்டிருக்கிறேன். பாரதிதாசனின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடல் மூலம் தமிழ் மீது பற்று வைத்தேன்.
பி.யு.சி. முடித்தவுடன் திருமணம். புகுந்து வீட்டுக்கு வந்து 20 ஆண்டுகள் கழித்துத் தமிழிலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து முதுகலைப் பட்டமும் பெற்றேன். தொடர் வாசிப்பு எனக்குப் பாவேந்தர் பற்றாளர் விருதைப் பெற்றுத்தந்தது.