

நீரிழிவு நோய் தொடர்பாகப் பேசினால், ‘கிளைசமிக் இன்டெக்ஸ்’ என்கிற வார்த்தையைப் பற்றிக் கூறுவார்கள். அப்படி என்றால் என்ன? ‘கிளைசமிக் இன்டெக்ஸ்’ என்பது ஓர் உணவுப் பொருள், உடலின் சர்க் கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கத் தின் அளவைக் குறிப்பதாகும். அந்தத்தாக்கத்தின் அடிப்படையில் உணவுப்பொருள்களுக்குக் குறியீடு ஒதுக்கப் படும்.
இந்தக் குறியீட்டின்படி 0 - 100 வரை யிலான அளவீட்டு எண்கள் உள்ளன. 0 என்றால் ஓர் உணவு உடலில் சர்க்கரை அளவைப் பாதிக்காது. 100 என்றால் அந்த உணவு ரத்தச் சர்க்கரை அளவை அதிக அளவில் உயர்த்தும் என்று அர்த்தம்.