கட்டுப்பாட்டுக்கு வந்த உயிர்க்கொல்லி நோய்

மார்ச் 24: உலக காசநோய் நாள்
கட்டுப்பாட்டுக்கு வந்த உயிர்க்கொல்லி நோய்
Updated on
1 min read

காசநோய் எனப்படும் டி.பி. ஒரு காலத்தில் உயிர்க்கொல்லி நோய். டி.பி. என்பது டியூபர்செல் பாசில்லஸ் அல்லது டியூபர் குளோசிஸ் என்பதன் சுருக்கமே. அந்தக் காலத்தில் வீட்டில் ஒருவருக்கு இந்நோய் வந்தால், மற்றவர்கள் அஞ்சி ஓடும் நிலை இருந்தது. இன்றோ காசநோய் உயிரைக் காவு வாங்கக்கூடிய கொடிய நோயல்ல. நோய் வந்தால் சில மாதங்கள் மருந்து, மாத்திரை உட்கொண்டால் போதும். நோயை வென்றுவிடலாம்.

காசநோய்க்கு இன்று மேம்பட்ட சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும்கூட, இன்றும் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. 2024இல் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் காச நோயால் உலகில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஆண்டில் 12 லட்சம் பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in