

உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று, சிறுநீரகம். இது நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது. ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்வதுடன் ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவுகிறது.
உடலில் உற்பத்தியாகும் நச்சுப் பொருள்களை நீக்க உதவும் சிறுநீரகங்களுக்குக் கூடுதலான சத்துகள் தேவை. அந்த வகையில் சிறுநீரகங்களைப் பராமரிக்க சத்துமிகுந்த காய்கறிகள் உதவுகின்றன.